Advertisement

உள்நாட்டு விமானக் கட்டணம் சுமார் 3 மடங்கு உயர்வு

By: vaithegi Sat, 22 Apr 2023 10:53:12 AM

உள்நாட்டு விமானக் கட்டணம் சுமார் 3 மடங்கு உயர்வு

சென்னை: கோடை விடுமுறை, ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட பல காரணங்களால் விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை சற்று கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் அதுமட்டுமின்றி பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு , சுங்க கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் கார்களின் பயணிப்போம் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது.

எனவே இதனை பயன்படுத்தி விமான நிறுவனங்கள், டிக்கெட் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தி உள்ளன. அதாவது சென்னையிலிருந்து வழக்கமாக தூத்துக்குடிக்கு 3,685 ரூபாயில் செல்ல முடியும். ஆனால் தற்போது கட்டணம் 10,000 ரூபாயை தாண்டி இருக்கிறது.

domestic airfare,summer vacation,ramzan festival ,உள்நாட்டு விமானக் கட்டணம்,கோடை விடுமுறை,  ரம்ஜான் பண்டிகை

மேலும் இதேபோன்ற நிலைமையே சென்னை, மதுரை, கோவை விமானங்களுக்கும் நீடிக்கிறது. தொழில் நகரமான கோவைக்கு ஏழு விமானங்கள் வரை சென்னையில் இருந்து விடப்படுகின்றன. இதுவரை ரூ. 3,400 என்கிற அளவிலேயே விமானக்கட்டணம் இருந்து வந்த நிலையில், தற்போது 5,600 முதல் 12,500 ரூபாய் வரை கட்டணம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு செல்வதற்கான கட்டடம் ரூ. 8,500 முதல் ரூ.10,000 வரை அதிகரித்துவிட்டது. இந்த திடீர் கட்டண உயர்வால் விமான பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

Tags :