Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இதுவரை முகக்கவசம் அணியாமல் இருந்த டொனால்டு டிரம்ப் முதன்முறையாக மாஸ்க் அணிந்தார்

இதுவரை முகக்கவசம் அணியாமல் இருந்த டொனால்டு டிரம்ப் முதன்முறையாக மாஸ்க் அணிந்தார்

By: Karunakaran Sun, 12 July 2020 11:01:54 AM

இதுவரை முகக்கவசம் அணியாமல் இருந்த டொனால்டு டிரம்ப் முதன்முறையாக மாஸ்க் அணிந்தார்

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால், ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணிவதால், மற்றவர்கள் தும்மினால் அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு நோய் தாக்காது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் இருந்து மாஸ்க் அணிய மறுத்து வந்தார்.அவருடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும், மாஸ்க் அணிய மறுத்துவிட்டார். ஆனால் அவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.

donald trump,corona mask,coronavirus,world health organization ,டொனால்ட் டிரம்ப், கொரோனா மாஸ்க், கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பு

தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் மாஸ் அணியாமல் பேட்டி அளித்து வந்தார். இந்நிலையில் நேற்று காயம் அடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறு சென்றபோது, முதன்முறையாக மாஸ்க் அணிந்து சென்றார்.

டிரம்ப் மாஸ் அணிந்து சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உலக சுகாதார மையம் வலியுறுத்திய நிலையிலும் இதுவரை முகக்கவசம் அணியாமல் இருந்த டொனால்டு டிரம்ப் முதன்முறையாக தற்போது மாஸ்க் அணிந்துள்ளார். மேலும் ஆவர், எந்த இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Tags :