Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எச்-1 பி விசாக்களை சீர்திருத்தம் மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க டொனால்ட் டிரம்ப் உத்தரவு

எச்-1 பி விசாக்களை சீர்திருத்தம் மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க டொனால்ட் டிரம்ப் உத்தரவு

By: Karunakaran Tue, 23 June 2020 2:16:16 PM

எச்-1 பி விசாக்களை சீர்திருத்தம் மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க டொனால்ட் டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் இதனை அதிகளவில் பெற்று வருகின்றனர். எச்-1பி விசா வைத்துள்ள ஒருவர் வேலை இழந்தால் 60 நாட்களுக்குள் நாட்டை காலி செய்து தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில், 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.

அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக மாற்று வேலையைத் தேட வழியில்லை என்பதால், 60 நாட்களுக்குப் பின் கால நீட்டிப்பிற்காகவும் அனுமதி கோர முடியாது. பலர் 30 முதல் 40 நாட்கள் வரையிலான காலத்திற்கு வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் உள்ளனர்.

donald trump,h-1b visas,america,reform ,எச்-1 பி விசா, டொனால்ட் டிரம்ப்,அமெரிக்கா,சீர்திருத்தம்

கொரோனா காரணமாக அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகமாகியுள்ளதால், எச்1 பி விசா பற்றிய விதிமுறைகளை கடுமையாக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் எச் 1 பி மற்றும் எச் 4 விசாவை இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், எச் -1 பி விசா முறையை "சீர்திருத்த" மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சீர்திருத்தங்களால் எச் -1 பி திட்டம் அதிக ஊதியம் வழங்கப்படும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும், மேலும் அதிக திறமையான விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :