Advertisement

இந்த ரத்த வகையினருக்கு கொரோனா வைரஸ் வரவே வராதாம்!

By: Monisha Sat, 13 June 2020 10:38:13 AM

இந்த ரத்த வகையினருக்கு கொரோனா வைரஸ் வரவே வராதாம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் அலறச் செய்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எந்த ரத்த வகையினரை தாக்கும், எந்த ரத்த வகையினரை தாக்காது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வெளியான தகவல் வருமாறு:-

அமெரிக்காவில் 75 ஆயிரம் பேரை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் O-Positive, O- Negative ரத்த வகையைக் கொண்டவர்கள் கொரோனா வைரஸ்க்கு குறைவான அளவில் பாதிக்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

corona virus,blood type,study,usa,genetic testing institute ,கொரோனா வைரஸ்,ரத்த வகை,ஆய்வு,அமெரிக்கா,மரபணு சோதனை நிறுவனம்

மற்ற ரத்த வகையினரைவிட O ரத்த வகையைக் கொண்டவர்களுக்கு 9-18% நோய்த்தொற்று ஏற்படுவது குறைவாக இருக்கும். அமெரிக்காவின் மரபணு சோதனை நிறுவனம் இந்த முடிவினை வெளியிட்டு உள்ளது.

சீனாவில் நடத்தப்பட்ட இதேபோன்ற இன்னொரு ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் A ரத்தவகை மிகவும் ஆபத்தானது என்ற ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. எனவே A-Positive, A-Negative, AB-Positive, AB-Negative போன்ற ரத்த வகையினருக்கு கொரோனா நோய்த்தொற்று மிக எளிதாக தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

corona virus,blood type,study,usa,genetic testing institute ,கொரோனா வைரஸ்,ரத்த வகை,ஆய்வு,அமெரிக்கா,மரபணு சோதனை நிறுவனம்

ஆனால் O-Positive O-Negative ரத்த வகையைக் கொண்டவர்கள் மற்ற ரத்தவகையை விட சற்று பாதுகாப்பான மனிதர்களாகக் கருதப்படுகின்றனர். இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் இதேபோன்ற முடிவு எட்டப்பட்டு இருக்கிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவலில் பெரும்பாலான நபர்கள் அறிகுறிகளே இல்லாமல் இருக்கின்றனர். சிலர் மட்டுமே அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் மரபணு மற்றும் ரத்த மாதிரிகளைக் கொண்டு கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க முடியுமா என்கிற ரீதியில் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு வைரஸ் பரவலில் மரபணு மற்றும் இரத்த மாதிரிகள் எவ்வளவு பங்கு வகிக்கும் என்பதைக் குறித்து தெளிவாக அளக்க முடியாது என்ற கருத்தையும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|
|