Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாய்ப்பு கொடுக்கலையா... டாட்டா பைபை; ராஜினாமா செய்யும் முக்கிய பிரமுகர்கள்

வாய்ப்பு கொடுக்கலையா... டாட்டா பைபை; ராஜினாமா செய்யும் முக்கிய பிரமுகர்கள்

By: Nagaraj Wed, 19 Apr 2023 12:43:11 PM

வாய்ப்பு கொடுக்கலையா... டாட்டா பைபை; ராஜினாமா செய்யும் முக்கிய பிரமுகர்கள்

கர்நாடகா: வாய்ப்பு கொடுக்கலை... ராஜினாமா... கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் மே 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வரும் நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் தீவிரம் காட்டி வருவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. நாளை வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், பாஜக 222 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 216 தொகுதிகளுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் போர்க்கொடி தூக்குகின்றனர். குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜ.,வில் இருந்து விலகியதால், அவர் ஏற்கனவே எம்.எல்.ஏ.,வாக உள்ள ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஒதுக்கப்பட்டது.

election,field,karnataka,resignation,seat, ,கர்நாடகா, களம், சீட், தேர்தல், ராஜினாமா

இத்தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் மகேஷ், முருசாவீரர் மடத்து மடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது பேசிய பொன்.ராஜயோகிந்திரன், லிங்காயத் சமூகத்தின் வாக்குகள் பாஜகவுக்கே என்றார். இதனிடையே தேவதுர்கா தொகுதியில் சீட் வழங்காததால் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. பிவி நாயக் பாஜகவில் இணைந்தார். அவருக்கு மான்வி சீட் வழங்கப்படும் என தெரிகிறது.

அதேபோல் புலிகேசிநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சீனிவாச மூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் மட்டுமின்றி பாஜகவிலும் அதிருப்தி குரல்கள் ஒலித்து வருகின்றன.

சித்தப்பூர் தொகுதியில் வாய்ப்பு கிடைக்காததால் பாஜக கலபுராகி இளைஞர் அணி தலைவர் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் லோக்போல் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 131 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 69 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

Tags :
|
|