Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீட்ல சின்ன பின் சார்ஜர் இல்லையா ? அதிபரிடம் இலங்கை மக்கள் கேட்ட கேள்வி..

வீட்ல சின்ன பின் சார்ஜர் இல்லையா ? அதிபரிடம் இலங்கை மக்கள் கேட்ட கேள்வி..

By: Monisha Mon, 11 July 2022 7:37:55 PM

வீட்ல சின்ன பின் சார்ஜர் இல்லையா ? அதிபரிடம் இலங்கை மக்கள் கேட்ட கேள்வி..

இலங்கை: இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதலே அசாதாரண சூழல் நிலவி வருகிறது.கோவிட் லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தின் தாக்கம் அந்நாட்டில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


அடிப்படை உணவு பொருள்கள் பெறவே மக்கள் நீண்ட சிரமத்திற்கு ஆளான நிலையில், நாள்தோறும் 15 மணிநேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு போன்ற சிரமங்களை சந்தித்த மக்கள் அரசுக்கு எதிராக வீதியில் களமிறங்கி பெரும் போராட்டங்களை நடத்த தொடங்கினர்.

comdey,charger,people,president ,இலங்கை,சார்ஜர்,அதிபர்,கேள்வி,

நாட்டின் இந்த மோசமான சீர்கேட்டிற்கு ஆட்சியில் உள்ள ராஜபக்சே குடும்பமே காரணம் எனக் கூறி பொதுமக்கள் அவர்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். மக்களின் தொடர் அழுத்தத்தை தாங்க முடியாமல் மகிந்தா ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அரசை விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை அந்நாட்டின் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றி நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார். அதிபர் மாளிகைக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் அதகளம் செய்து வரும் நிலையில், ஒரு நபர் இலங்கை அதிபரிடம் இன்ஸ்டாகிராமில் சார், வீட்டில் சின்ன பின் சார்ஜர் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பதிவின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் தரப்பு கணக்கில் இருந்து ஆட்டோமெட்டிக் பதில் ஒன்றும் வந்துள்ளது.அதில் 'எங்களை தொடர்பு கொண்டமைக்கு நன்றி, உங்கள் முழு பெயர், தொலைபேசி போன்ற தகவல்களை தாருங்கள்' என ஆட்டோ மோட்டில் இருந்து பதிவிடுமாறு பதில் வந்துள்ளது.

Tags :
|
|