Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வை நடத்த வேண்டாம்; கிரேட்டா தன்பர்க், சோனுசூட் வலியுறுத்தல்

நீட் தேர்வை நடத்த வேண்டாம்; கிரேட்டா தன்பர்க், சோனுசூட் வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 26 Aug 2020 10:24:42 AM

நீட் தேர்வை நடத்த வேண்டாம்; கிரேட்டா தன்பர்க், சோனுசூட் வலியுறுத்தல்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு... கொரோனா பரவலுக்கு மத்தியில், நீட் தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலரான கிரேட்டா தன்பர்க் மற்றும் பாலிவுட் நடிகர் சோனு சூட் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல் படிப்பு முடிப்பவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய அளவில் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, மே மாதம் நடப்பதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, செப்., 13ல் நீட் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

need,j.e.e.,choices,cancellation,sonu suite,request ,நீட், ஜே.இ.இ., தேர்வுகள், ரத்து, சோனு சூட், கோரிக்கை

தேர்வுகளை ஒத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கொரோனா சூழலில் நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது:

இந்தியாவில், கொரோனா பரவல் மட்டுமன்றி பல இடங்களில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான நிலையில், மாணவர்களுக்கு, தேசிய தேர்வுகள் எழுத கேட்டுக் கொள்ளப்படுவது நியாயமல்ல. தேர்வை ஒத்தி வைக்க கூறுபவர்களுக்கு நான் துணை நிற்பேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோல, பாலிவுட் நடிகர் சோனு சூட்டும், நீட், ஜே.இ.இ., தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
|
|