Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலைஞரின் பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக நடத்த வேண்டாம் - திமுக தலைவர்

கலைஞரின் பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக நடத்த வேண்டாம் - திமுக தலைவர்

By: Karunakaran Tue, 02 June 2020 6:31:50 PM

கலைஞரின் பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக நடத்த வேண்டாம் - திமுக தலைவர்

திராவிட கழக்கத்தின் தலைவரும், தமிழகத்தில் 5 முறை முதல்வர் பதவியை வகித்தவரும், திரைத்துறாய் படைப்பாளருமான மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் (ஜூன் 3) கொண்டாட்டத்தை கொரோனா பரவலால் சென்னையில் ஆடம்பர நிகழ்வுகள் எதுவும் நடத்த வேண்டாம், அவரவர் இடங்களிலேயே சமூக ஒழுங்கை கடைப்பிடித்து கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

dmk,june 3rd,m. karunanidhi,m k stalin,corona virus, ,மு. கருணாநிதி, மு.க ஸ்டாலின், ஜூன் 3, கொரோனா வைரஸ்

‘நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்தநாளான நாளை (ஜூன் 3) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி – வட்ட – பேரூர் – கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் – திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன். என்று தெரிவித்துள்ளார்

ஏற்கனவே அறிவித்தற்கிணங்க நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் இடங்களிலிருந்தே சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும் தலைவர் கலைஞரின் புகழ் போற்றுவோம்.’

Tags :
|