Advertisement

போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது... டிஜிபி உத்தரவு

By: Nagaraj Wed, 20 July 2022 09:49:43 AM

போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது... டிஜிபி உத்தரவு

சென்னை: ஒட்டக்கூடாது... காவல்துறையினா் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ‘ஸ்டிக்கா்’ ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறையினா் தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் கருப்பு ‘ஸ்டிக்கா்களை’ நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் 14-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.

அதில், காவல் துறை உயா் அதிகாரிகள் பயன்படுத்தும் அலுவலக வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கா் பயன்படுத்தக் கூடாது. போலீஸ் என்ற பலகை மற்றும் ‘ஸ்டிக்கரை’ சொந்த வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள காவல்துறை உயா் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது.

dgp circular,order,sticker,police,superintendents ,
டிஜிபி சுற்றறிக்கை, உத்தரவு, ஸ்டிக்கர், காவல்துறை, கண்காணிப்பாளர்கள்

காவலா்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் போலீஸ் என்ற பலகை மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடாது என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயா் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா்.

அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே ‘போலீஸ் என்ற பலகை மற்றும் ஸ்டிக்கா்’ பயன்படுத்த வேண்டும் என அவா் அதில் அறிவுறுத்தியுள்ளாா். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையா்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் தங்கள் கீழ் பணி புரியும் காவலா்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் பலகை அல்லது ‘ஸ்டிக்கா்’ பயன்படுத்தி வந்தால் உடனடியாக அதை அகற்ற அறிவுறுத்த வேண்டும்.


இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவதோடு, உத்தரவை பின்பற்றியது தொடா்பான அறிக்கையை தனக்கு சமா்ப்பிக்க வேண்டும் எனவும் டிஜிபி சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

Tags :
|
|