Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனோலா தோட்டங்களில் செல்பி எடுக்காதீர்கள்... போலீசார் எச்சரிக்கை

கனோலா தோட்டங்களில் செல்பி எடுக்காதீர்கள்... போலீசார் எச்சரிக்கை

By: Nagaraj Tue, 05 July 2022 10:00:43 PM

கனோலா தோட்டங்களில் செல்பி எடுக்காதீர்கள்... போலீசார் எச்சரிக்கை

கனடா: எடுக்காதீங்க செல்பி... கனடாவில் கனோலா தோட்டங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என ஒன்றாரியோ போலீஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
கனடா தின நிகழ்வுகளைத் தொடர்ந்த வார இறுதி நாட்களில் விடுமுறைக்காக செல்லும் மக்கள் கனோலா தோட்டங்களில் இறங்கி செல்ஃபி எடுத்து வருகின்றனர். மக்களின் இந்த செயற்பாடுகளினால் கனோலா விளைச்சலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கனோலா தோட்டங்களுக்குள் அத்துமீறி பிரவேசிப்போர் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு கனோலா தோட்டங்களில் இறங்கி புகைப்படம் எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

canola,garden,damage,action,warning ,கனோலா, தோட்டம், சேதப்படுத்தினால், நடவடிக்கை, எச்சரிக்கை

கனோலா தோட்டங்கள் இந்தக் காலப் பகுதியில் விளைச்சல் தரும் நிலையில் காணப்படுவதாகவும், விளைச்சலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கனடாவின் கனோலா விளைச்சல் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், உடல் எடையை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கனோலா தோட்டத்தை சேதப்படுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
|
|
|
|