Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூருவை காலி செய்துவிட்டு யாரும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் - எடியூரப்பா வேண்டுகோள்

பெங்களூருவை காலி செய்துவிட்டு யாரும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் - எடியூரப்பா வேண்டுகோள்

By: Karunakaran Tue, 07 July 2020 12:56:58 PM

பெங்களூருவை காலி செய்துவிட்டு யாரும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் - எடியூரப்பா வேண்டுகோள்

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு கல்வி கற்கவும், தொழில் நிறுவனங்களில் வேலை செய்யவும் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். பெங்களூருவில் அதிகாரப்பூர்வமாக 1 கோடியே 23 லட்சம் பேர் குடியிருந்து வருகின்றனர்.

கர்நாடகத்தின் நிதி வருவாயில் 90 சதவீத வருமானம் பெங்களூரு மாநகர் மூலம் மட்டும் கிடைக்கிறது. சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் புகழிடமாக உள்ளது.இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன.

bangalore,coronavirus,yeddyurappa,karnataka cm ,பெங்களூர், கொரோனா வைரஸ், எடியூரப்பா, கர்நாடக முதல்வர்

வேலை இழந்த வெளிமாநிலத்தினர் பெங்களூருவில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டனர். தற்போது, பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் வெளிமாநிலத்தினர், வெளிமாவட்டத்தினர் பெங்களூருவுக்கு வரத் தொடங்கினர். தற்போது, கடந்த ஒரு வாரமாக தலைநகர் பெங்களூருவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகியுள்ளதால், வெளிமாவட்ட தொழிலாளர்கள் மற்றும் பிற மாநிலத்தவர்கள், சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, பெங்களூருவில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் பெங்களூருவில் இருக்கும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் மற்றும் பிற மாநிலத்தினர், கொரோனாவுக்கு பயந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூருவில் இருந்து பிற மாவட்டத்தினர் சொந்த ஊர் திரும்புவதால் பெங்களூருவில் தொழில்கள் முடங்கி, அரசின் வருவாய் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

Tags :