Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம் - உத்தவ் தாக்கரே

சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம் - உத்தவ் தாக்கரே

By: Karunakaran Mon, 27 July 2020 12:22:24 PM

சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம் - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது 60-வது பிறந்தநாளையொட்டி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் நேர்மறையானவை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், 3 கட்சிகளின் அனுபவத்தில் இந்த அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எனது தலைமையிலான அரசாங்கத்தின் எதிர்காலம் எதிர்க்கட்சிகளின் கைகளில் இல்லை. இந்த கூட்டணி அரசு முச்சக்கர வண்டி. இது ஏழைகளுக்கான வாகனம். அதன் ஸ்டீயரிங் என் கைகளில் உள்ளது. மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து இருக்கிறார்கள் என்று கூறினார்.

uddhav thackeray,coalition government,shiv sena,bjp ,உத்தவ் தாக்கரே, கூட்டணி அரசு, சிவசேனா, பாஜக

மகா விகாஷ் அகாடி கூட்டணி ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்று கூறுகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் கவிழ்த்தால் அது ஜனநாயகமாகி விடுமா? நான் கொள்கையில் இருந்து பிறழவில்லை. ஒரு கூட்டணியில் தான் சேர்ந்து இருக்கிறேன் என்று உத்தவ் தாக்கரே சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் அதில், இந்த அரசை கவிழ்ப்பதில் இன்பம் கிடைத்தால் இப்போதே கவிழ்த்து விடுங்கள். ஊகிக்கப்படுவது போல் செப்டம்பர், அக்டோபர் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? சிலர் ஆக்கப்பூர்வமான பணியை செய்வதில் இன்பம் அடைகிறார்கள். ஆனால் சிலர் அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags :