Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பழங்குடியின சமூகத்திற்கு சந்தர்ப்பத்திற்கான கதவுகள்... எமாவின் விருப்பம்

பழங்குடியின சமூகத்திற்கு சந்தர்ப்பத்திற்கான கதவுகள்... எமாவின் விருப்பம்

By: Nagaraj Fri, 18 Nov 2022 12:27:09 PM

பழங்குடியின சமூகத்திற்கு சந்தர்ப்பத்திற்கான கதவுகள்... எமாவின் விருப்பம்

கனடா: பழங்குடியின சமூகத்திற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய கதவுகளை திறந்து விடுவதே தமது நோக்கம் என எமா தெரிவித்துள்ளார்.

கனடாவில் பழங்குடியின பெண் ஒருவர் முதல் தடவையாக உலக அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து எமாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

எமா மொரிசன் (Emma Morrison) என்ற பழங்குடியினப் பெண் இவ்வாறு வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக அழகிப் போட்டியில் எமா, கனடாவை பிரதிநிதித்துவம் செய்ய உள்ளார்.

tribal girl,ema,historic achievement,miss world pageant ,பழங்குடியின பெண், எமா, வரலாற்று சாதனை, உலக அழகி போட்டி

தனது 16 வயது வரையில் ஒன்ராறியோவின் பழங்குடியின மக்கள் வாழும் க்ரீ என்னும் கிராமத்தில் மீன் பிடித்தும், வேட்டையாடியும் தனது வாழ்க்கையை முன்னெடுத்திருந்தார்.

திடீரென வாழ்க்கையில் திருப்பு முனையாக உலக அழகிப்போட்டியில் எமா பங்கேற்கத் தீர்மானித்தார். முதல் தடவையாக கனடாவில் தேசிய ரீதியாக உலக அழகிப் பட்டத்திற்காக போட்டியிட எமா தேர்வாகியுள்ளார். அடுத்த ஆண்டு வியட்நாமில் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில் எமா, கனடாவை பிரதிநிதித்துவம் செய்ய உள்ளார்.

பழங்குடியின சமூகத்திற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய கதவுகளை திறந்து விடுவதே தமது நோக்கம் என எமா தெரிவித்துள்ளார்.

Tags :
|