Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள்... தலைவர்கள் மரியாதை!

டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள்... தலைவர்கள் மரியாதை!

By: Monisha Thu, 15 Oct 2020 09:16:30 AM

டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள்... தலைவர்கள் மரியாதை!

டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி எனப் போற்றப்படுகிறார். இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அவரது புகைப்படங்களையும், அவர் மாணவர்களுக்கு கூறிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலாம் குறித்து கூறியதாவது:- "புதிய மற்றும் வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்காக, நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக கலாம் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அவர் தொடர்ந்து வரும் நம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

dr. abdul kalam,birthday,leaders,honors,memories ,டாக்டர் அப்துல் கலாம்,பிறந்தநாள்,தலைவர்கள்,மரியாதை,நினைவுகள்

உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பதிவில், "தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரும், இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணை திட்டங்களை கட்டமைத்தவருமான டாக்டர் கலாம் எப்போதும் வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். அறிவியல் மற்றும் கல்வித் துறையில் அவரது பங்களிப்பு என்றும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறுகையில், "முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்குவதாகவும், தனது விசாலமான பார்வை மற்றும் மனிதநேயத்திற்காக பணியாற்றி உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்திய மக்கள் ஜனாதிபதியாக அவர் நினைவுகூரப்படுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|