Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.4,500 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்

ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.4,500 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்

By: vaithegi Thu, 04 Aug 2022 3:31:49 PM

ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.4,500 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியாவில் 2022-2023-ம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.2,821 என மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது.

ஆனால் கடந்த ஆண்டின் விலையான ரூ.2,755 உடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் டன்னுக்கு ரூ.66 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.4,500 விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதில் மூன்றில் இரு பங்குக்கும் குறைவான கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயித்திருப்பது நியாயமல்ல.

ramdas,sugarcane,procurement price ,ராமதாஸ் ,கரும்பு,கொள்முதல் விலை

மேலும் தமிழகத்தில் கரும்பு கொள்முதல் விலை கடந்த 6 ஆண்டுகளில் ரூ.266 மட்டுமே, அதாவது ஆண்டுக்கு ரூ.44 மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கரும்புக்கான உற்பத்திச் செலவை கணக்கிடும் முறையை மத்திய அரசும், ஊக்கத்தொகை வழங்கும் முறையை தமிழக அரசும் மாற்றியமைக்க வேண்டும்.

இதை அடுத்து அதன் மூலம் ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.4,500 கொள்முதல் விலையாக வழங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Tags :
|