Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்க .... டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்க .... டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

By: vaithegi Thu, 02 Mar 2023 2:33:45 PM

எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்க    ....   டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஓர் எரிவாயு உருளையின் விலை ரூ.1118.50 ஆக உயர்ந்திருக்கிறது.

இது அவர்களின் மாதச் செலவுகளை மிக கடுமையாக பாதிக்கும். கடந்த 2021ம் ஆண்டு மேயில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.710 ஆகயிருந்தது. கடந்த 20 மாதங்களில் ரூ.408, அதாவது 58% உயர்ந்திருக்கிறது. மக்களின் வருவாய் 5% கூட உயராத நிலையில், சமையல் எரிவாயு விலையை 58% உயர்த்துவது எவ்வகையிலும் நியாயமல்ல.

ramadoss,gas ,ராமதாஸ் ,எரிவாயு

இதையடுத்து சமையல் எரிவாயு விலை கடைசியாக கடந்த ஜூலையில் உயர்த்தப்பட்டது. அதன் பின் உலகச் சந்தையில் எரிவாயு விலை சரிந்திருக்கிறது. இந்தியாவிலும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலை குறைக்கப்பட்டது. வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலையை குறைப்பதற்கு பதிலாக உயர்த்துவது நியாயமா?

சமையல் எரிவாயு விலை ரூ.1000-க்கும் மேல் இருக்கக் கூடாது. எனவே, சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் அது மட்டுமின்றி, சமையல் எரிவாயு உருளைகளுக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

Tags :