Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலர் பழங்களை பயன்படுத்தி அழகிய பிள்ளையார் உருவத்தைச் செய்து வியப்பில் ஆழ்த்திய சூரத் டாக்டர்

உலர் பழங்களை பயன்படுத்தி அழகிய பிள்ளையார் உருவத்தைச் செய்து வியப்பில் ஆழ்த்திய சூரத் டாக்டர்

By: Karunakaran Sat, 22 Aug 2020 3:19:57 PM

உலர் பழங்களை பயன்படுத்தி அழகிய பிள்ளையார் உருவத்தைச் செய்து வியப்பில் ஆழ்த்திய சூரத் டாக்டர்

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

வடமாநில கோவில்களில் பக்தர்கள் இன்றி தீப ஆராதனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பிள்ளையார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

surat,dried fruits,vinayag chadhurthi,vinayag image ,சூரத், உலர்ந்த பழங்கள், விநாயக் சாதுர்த்தி, விநாயக் படம்

இந்நிலையில் சூரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவரின் வித்தியாசமான முறையில் உலர் பழங்களால் உருவாக்கிய பிள்ளையார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத இந்த பிள்ளையார் சிலை 20 அங்குலம் உயரத்துடன் உள்ளது. சூரத் டாடாக்டர் அதிதி மிட்டல் இதனை உருவாக்கியுள்ளார்.

உலர் பழங்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் அவரது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிள்ளையாரில் உள்ள உலர் பழங்கள் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக டாக்டர் அதிதி மிட்டல் தெரிவித்துள்ளார். நிலக்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி, பைன் விதைகள் போன்ற உலர் பருப்புகளுடன் காட்சியளிக்கும் இந்தப் பிள்ளையார் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Tags :
|