Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 100 நாள் வேலைத் திட்டத்தில் வடிகால் பணிகளுக்கு முன்னுரிமை

100 நாள் வேலைத் திட்டத்தில் வடிகால் பணிகளுக்கு முன்னுரிமை

By: Nagaraj Tue, 21 Mar 2023 08:43:35 AM

100 நாள் வேலைத் திட்டத்தில் வடிகால் பணிகளுக்கு முன்னுரிமை

திருவாரூர்: 100 நாள் வேலைத்திட்டத்தில் வடிகால் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வடிகால் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஊராட்சி மன்றங்கள் மூலம் கிராமப்புறங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்படி, குறிப்பிட்ட அளவு வேலை முடிந்தவுடன் ஒரு நாளைக்கு ரூ.214 கூலி வழங்கப்படுகிறது. இந்தப் பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தேர்வு செய்யப்படுகிறது.

drainage,koradacherry,panchayats,work ,100 நாள் வேலை,  ஊராட்சி, கொரடாச்சேரி, பணிகள், முன்னுரிமை, வடிகால் பணி

இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் வடிகால் தோண்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி, தடையின்றி பாசனம் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வாய்க்கால் துார்வார இப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வடிகால்களை சுத்தம் செய்யும் போது, குறிப்பிட்ட இடைவெளியில் 2 அடி ஆழம், 6 அடி நீளம் மற்றும் 2.5 அடி அகலம் கொண்ட நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெரும்புகழூர், அம்மையப்பன், வண்டம்பாளையம் உள்ளிட்ட 44 ஊராட்சிகளில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின்படி வண்டம்பாளை ஊராட்சி திருப்பள்ளிமுக்கூடல் கிராமத்தில் தோண்டும் பணிகள் நடைபெற்றன.

Tags :