Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று திரவுபதி முர்மு வெற்றி .. வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார்

ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று திரவுபதி முர்மு வெற்றி .. வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார்

By: vaithegi Fri, 22 July 2022 06:27:07 AM

ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று  திரவுபதி முர்மு வெற்றி  ..  வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார்


புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி. இந்தியாவின் முதல் குடிமகன் நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே. இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத் கோவிந்த். 14-வது ஜனாதிபதியான அவரது பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

அதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.அதன்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல பெருமைகளை இதன் மூலம் அவர் பெறுகிறார்.

draupathi murmu,presidential election,won , திரவுபதி முர்மு ,ஜனாதிபதி தேர்தல்,வெற்றி

மேலும் நாடு விடுதலைக்குப்பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் திரவுபதி முர்முவையே சாரும். 3-வது சுற்றிலேயே முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்கா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதை தொடர்ந்து ராம்நாத் கோவிந்த், மோடி வாழ்த்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதைப்போல பிரதமர் மோடி, முர்முவின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தினார். மேலும் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ராகுல்காந்தி மத்திய மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத் (உ.பி.),

மேலும் மம்தாபானர்ஜி (மேற்குவங்காளம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்) , தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் திரவுபதி முர்முவுக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

Tags :