Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த ஆண்டு சமாளித்து விடலாம்...சென்னையில் குடிநீர் தேவை பாதியாக குறைந்து!

இந்த ஆண்டு சமாளித்து விடலாம்...சென்னையில் குடிநீர் தேவை பாதியாக குறைந்து!

By: Monisha Tue, 02 June 2020 12:23:15 PM

இந்த ஆண்டு சமாளித்து விடலாம்...சென்னையில் குடிநீர் தேவை பாதியாக குறைந்து!

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் வந்துவிட்டால் தண்ணீர் பிரச்சனையும் சேர்ந்து வந்துவிடும். இந்த ஆண்டு அதோடுகூட கொரோனா தாக்கமும் சேர்ந்து கொண்டதால் பிரச்சினையை சமாளிக்க முடியுமா என்று எல்லாரும் திகைத்தனர். ஆனால் கொரோனா தாக்கம் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால் பெரிய மால்கள், ஓட்டல்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டதால் குடிநீர் தேவை பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகர பகுதிகளின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு டி.எம்.சி. வரை தண்ணீர் தேவைப்படுகிறது. இதுதவிர வீராணம் மற்றும் மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரும் பயன்படுத்தப்படுகிறது.

summer,water problem,drinking water needs,chennai ,கோடைக்காலம்,தண்ணீர் பிரச்சனை,குடிநீர் தேவை,சென்னை

நடப்பாண்டு பருவ மழை ஓரளவு கைகொடுத்ததால் ஏரிகளில் போதுமான தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீர்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த சீசனில் 7.5 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநில அரசும் நிமிடத்துக்கு 380 கன அடி நீர் வீதம் திறந்து விட்டு வருகிறது.

தற்போது கையிருக்கும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநில அரசு திறந்து விட்டுள்ள தண்ணீர் மூலம் இந்த ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவையை நாம் பூர்த்தி செய்து கொள்ள முடியும். சென்னை மாநகருக்கு தற்போது 700 கன அடி வீதம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரும் நன்றாக இருக்கிறது. சென்னையில் தண்ணீர் தேவை பாதியாக குறைந்து விட்டது.

Tags :
|