Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடிநீர் பராமரிப்பு பணி .. சென்னையில் ஒருசில பகுதிகளில் விநியோகம் நிறுத்தப்படும்

குடிநீர் பராமரிப்பு பணி .. சென்னையில் ஒருசில பகுதிகளில் விநியோகம் நிறுத்தப்படும்

By: vaithegi Thu, 16 Mar 2023 6:15:00 PM

குடிநீர் பராமரிப்பு பணி  .. சென்னையில்  ஒருசில பகுதிகளில் விநியோகம் நிறுத்தப்படும்


சென்னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணிகாரணமாக வரும் 18-ம் தேதி குடிநீர் விநியோகம் செய்யப்படாது .. தமிழகத்தில் அவ்வப்போது குடிநீர் வாரியத்தின் மூலமாக குடிநீர் தொட்டி பராமரிப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக ராமாபுரம் விரிவான குடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்புப் பணி செய்யப்பட்டு வருகிறது.

இதனால், சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதாவது, மார்ச் 18-ம் தேதி முதல் மார்ச் 19-ம் தேதி காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணாநகர். தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் ஆகிய பகுதிகளில் குடிநீர் தொட்டி பராமரிப்பு காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

distribution,maintenance work ,விநியோகம் ,பராமரிப்பு பணி


இதனால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளும் படியும், குறைந்த அளவிலான நீரை பயன்படுத்தும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவையான குடிநீரை பொதுமக்கள் லாரிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொது மக்கள் குடிநீர் வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் பதிவு செய்து தேவையான குடிநீரை பெற்றுக்கொள்ளலாம் எனவும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக எந்த வித தடையுமின்றி சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மூலமாகவும், தெருக்களுக்கு லாரிகள் மூலமாகவும் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் வழக்கம்போல நடைபெறும்

Tags :