Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முதல் 2 நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்

சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முதல் 2 நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்

By: vaithegi Tue, 19 Sept 2023 12:46:41 PM

சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முதல் 2 நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்

சென்னை: குடிநீர் இணைப்பு பணிகள் காரணமாக நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்வதாக குடிநீர் வாரியத்தின் சார்பில் அறிவிப்பு ... சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு நாளை காலை 6 மணி முதல் வருகிற செப் 22 ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்துக்கு கீழ் உள்ள குடிநீர் பிரதான குழாயில் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அண்ணாநகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

drinking water,chennai ,குடிநீர் ,சென்னை

எனவே, இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இன்றே போதுமான நீரை சேமித்துக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கூடுதல் தேவை இருக்கும் பொதுமக்கள் குடிநீர் லாரிகள் மூலமாக தேவையான நீரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது மட்டுமல்லாமல், குடிநீர் வாரியத்தின் மூலமாக வழங்கப்படும் தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்படாதே தவிர தெருக்களுக்கு வழக்கம் போன்று லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் அதிகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் சேமித்து வைக்கும் நீரை புழு புகாத வகையில் பாதுகாக்கும்படியும் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

Tags :