Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான தேர்வு வினாத்தாள் மற்றும் மதிப்பெண் நாளை வெளியீடு

ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான தேர்வு வினாத்தாள் மற்றும் மதிப்பெண் நாளை வெளியீடு

By: vaithegi Sun, 26 Nov 2023 11:30:51 AM

ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான தேர்வு வினாத்தாள் மற்றும் மதிப்பெண் நாளை வெளியீடு

சென்னை: தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பதவிக்கான காலி பணியிடங்கள் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், எழுத்துத் தேர்வு மூலமாக தகுதியான நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களை தேர்வு செய்யும் பொருட்டு கடந்த 19-ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. கிட்டத்தட்ட 9352 பேர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பதவிக்கான எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், தேர்வில் கலந்து கொண்டவர்களின் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் நாளை காலை 9:30 மணி அளவில் வெளியிடப்பட இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவித்து உள்ளார்.

exam question paper,score,driver,conductor ,தேர்வு வினாத்தாள் ,மதிப்பெண், ஓட்டுநர் ,நடத்துனர்

அதாவது, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பதவிக்கான தேர்வில் கலந்து கொண்டவர்கள் https://tancet.annauniv.edu/tancet/setc/index.php-என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக நாளை விடைத்தாளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

இதையடுத்து இந்த எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு நேர்காணல் மூலமாக பணியிடம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|
|