Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்ப்படும் .. அமைச்சர் சிவசங்கர்

டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்ப்படும் .. அமைச்சர் சிவசங்கர்

By: vaithegi Fri, 17 Feb 2023 09:15:10 AM

டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்ப்படும்   ..   அமைச்சர் சிவசங்கர்

சென்னை: நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்படும் .... போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத பொது போக்குவரத்து சேவைகளை தினந்தோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப் பினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தமிழ்நாடு லிமிடெட்டில் 685 ஓட்டுனர் உடன் நடத்துனர் (டிரைவர் கம் கண்டக்டர்) பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிமிடெட்டில், 122 ஓட்டுனர் பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனரால் ஓட்டுனர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதிவாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும்.

sivashankar,driver ,சிவசங்கர்,டிரைவர்

இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் மேலாண் இயக்குனர் அவர்களால், ஓட்டுனர் பணியிடங்களுக்குத்தேவையான கல்வித்தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதி வாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியல் அப்போக்குவரத்துக்கழக வட்டார எல்லைக்குட்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும். மேலும், ஓட்டுனர் உடன் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களால் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும்.

மேலும் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்காக அந்தந்த மேலாண் இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஓட்டுனர் உடன் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான நபர்களை, சாலைப்போக்குவரத்து நிறுவனத்தின் உதவியுடன் தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி தேர்வு செய்வார்கள். எனவே இதன் மூலம், பொதுமக்களுக்கான பொது போக்குவரத்து சேவைகள் மேம்படும் என அவர் கூறியுள்ளார்.

Tags :