Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் , குளிக்கவும் 11வது நாளாக தடை

ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் , குளிக்கவும் 11வது நாளாக தடை

By: vaithegi Fri, 21 Oct 2022 11:05:30 AM

ஒகேனக்கலில் பரிசல்  இயக்கவும் , குளிக்கவும் 11வது நாளாக தடை

ஒகேனக்கல் : ஒகேனக்கல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு 11 ஆவது நாளாக படகு சவாரி ரத்து ... கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி கொண்டு வருகின்றன.

இதனால் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வரும் காரணத்தினால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆறு மற்றும் சின்னாற்றில் கரைபுரண்டு வெள்ள நீர் ஓடுகிறது.

okanagan,water supply ,ஒகேனக்கல் ,நீர்வரத்து

இதனை அடுத்து 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது . கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 15,000 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் 11வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை ஒரு லட்சத்து 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்து 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

Tags :