Advertisement

நெல்லையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை

By: vaithegi Mon, 06 Mar 2023 11:52:20 AM

நெல்லையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: தமிழகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் மூலம் தென் மாவட்டங்களில் அரசின் நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் இன்று மற்றும் நாளை கள ஆய்வு நடத்த இருக்கிறார். அதனால் இந்த 2 நாட்களும் ட்ரான்கள் பறக்க தடை விதிப்பு

தமிழகத்தில் மக்களின் நலனிற்காக ஏகப்பட்ட நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மக்களுக்கு எந்த அளவிற்கு சென்று அடைந்துள்ளது என்பது பற்றி கள ஆய்வு நடத்த, முதல்வர் ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

எனவே இத்திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நிர்வாக பணி, மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார்.அந்த வகையில் மார்ச் 6 ஆம் தேதி மதுரையிலும், மார்ச் 7 ஆம் தேதி நெல்லையிலும் கள ஆய்வு நடத்த இருக்கிறார்.

drones,rice ,ட்ரோன்கள் ,நெல்லை


இந்த நிலையில் முதல்வரின் தென்மாவட்ட பயணத்தை ஒட்டி அவர் செல்லும் வழித்தடங்களில் இன்று மற்றும் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் மார்ச் 6- ஆம் தேதி மதுரையிலிருந்து நெல்லைக்கும் மார்ச் 7 ஆம் தேதி நெல்லையிலிருந்து மதுரைக்கும் சாலை வழியாக பயணம் செய்கிறார்.

எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தையொட்டி இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கவுள்ளார்.

Tags :
|