Advertisement

சேலத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை

By: vaithegi Sun, 23 July 2023 3:42:28 PM

சேலத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை

சேலம்: தமிழ்நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி முதல், குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து அதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் பணியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 24-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

drones,m.k.stalin ,டிரோன்கள் , மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

எனவே இதற்காக, நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைபுரிந்து, அங்கிருந்து சாலை வழியாக தர்மபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் தொப்பூருக்குச் சென்று, நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சாலை வழியாக சேலம் மாவட்டம்,காமலாபுரம் விமான நிலையம் வருகை தந்து, விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்கள். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|