Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் போதைப்பொருள் மறு வாழ்வு மையத்தில் போதைபொருள் கடத்தல் கும்பல் தாக்குதல்

மெக்சிகோவில் போதைப்பொருள் மறு வாழ்வு மையத்தில் போதைபொருள் கடத்தல் கும்பல் தாக்குதல்

By: Karunakaran Sat, 04 July 2020 11:06:38 AM

மெக்சிகோவில் போதைப்பொருள் மறு வாழ்வு மையத்தில் போதைபொருள் கடத்தல் கும்பல் தாக்குதல்

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. மெக்சிகோவிலும், எல்லை வழியாக அமெரிக்காவிற்கும் இந்த போதை பொருள் கடத்தலை பல்வேறு குழுக்கள் செய்து வருகின்றனர். மேலும், மெக்சிகோவில் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை மீட்க அந்நாடும், பல்வேறு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதை மறு வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை அதிகரிக்கவும், தொழில் ரீதியில் போட்டியை உருவாக்கவும் பல குழுக்கள் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றன.

drug trafficking gang,drug rehab center,attack,mexico ,போதைப்பொருள் கடத்தல் கும்பல், போதை மறுவாழ்வு மையம், தாக்குதல், மெக்ஸிகோ

இந்நிலையில் அந்நாட்டின் குவான்ஜூவாட்டோ மாகாணத்தின் ரஃபடோ நகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திற்குள் போதைப்பொருள் கடத்தல் கும்பல் புகுந்து மறுவாழ்வு பெற சிகிச்சையில் இருந்த நபர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 24 பேர் பரிதாபாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போதைப்பொருள் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|