Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதையில் இருந்த புகைப்படம்... மன்னிப்பு கோரிய பின்லாந்து பிரதமர்

போதையில் இருந்த புகைப்படம்... மன்னிப்பு கோரிய பின்லாந்து பிரதமர்

By: Nagaraj Fri, 26 Aug 2022 7:32:16 PM

போதையில் இருந்த புகைப்படம்... மன்னிப்பு கோரிய பின்லாந்து பிரதமர்

ஹெல்சிங்கி: மன்னிப்பு கோரினார்... போதையில் இருந்த தன் 'வீடியோ'வும் புகைப்படமும் வெளியானது குறித்து பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமரான சன்னா மரீன் 37, உலகின் மிக இள வயது பிரதமர் என்ற பெருமைக்குரியவர். சமீபத்தில் இவருடைய வீட்டில் நடைபெற்ற 'பார்ட்டி' ஒன்றில் தன் தோழியருடன் மது அருந்தி நடனம் ஆடிய வீடியோ கடந்த வாரம் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

apologized,drunk,party,home,photo ,மன்னிப்பு கேட்டார், மது போதை, விருந்து, வீட்டில், புகைப்படம்

இது குறித்து சன்னா மரீன் கூறுகையில் ''நான் மது அருந்தி நடனம் ஆடியது உண்மை தான். ஆனால் வேறு போதைப் பொருள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை'' என்றார். இந்நிலையில் அவருடைய தோழியருடன் முத்தமிடுவது போன்ற ஒரு புகைப்படம் நேற்று வெளியானது.

இது குறித்து சன்னா மரீன் கூறியதாவது: அந்த புகைப்படம் ஒரு தனிப்பட்ட விருந்தின்போது என் வீட்டில் எடுக்கப்பட்டது. அது மாதிரியான புகைப்படத்தை எடுத்திருக்கக் கூடாது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|
|