Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவகூடும்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவகூடும்

By: vaithegi Wed, 12 Apr 2023 3:47:02 PM

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவகூடும்

சென்னை: தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து கொண்டு வருகிறது . கத்தரி வெயில் இன்னும் தொடங்கவில்லை அதற்குள் வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு வருகிறது. இந்தாண்டு வெப்பநிலை சற்று அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் அவ்வபோது இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து கடந்த வாரங்களில் மதுரை, சிவகங்கை, திருச்சி, தென்காசி, தர்மபுரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

dry weather,tamil nadu,puducherry ,வறண்ட வானிலை,தமிழகம் ,புதுவை

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஏப்.16ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவ கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். பிற மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :