Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

நாளை முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

By: vaithegi Wed, 11 Jan 2023 09:33:09 AM

நாளை முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

சென்னை: வறண்ட வானிலை நிலவக்கூடும் ........ நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. இதனை அடுத்து இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

weather,tamil nadu,puduvai,karaikal ,வானிலை ,தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்

மேலும் நாளை முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :