Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மற்றும் நாளை மறுநாள் வறண்ட வானிலைதான் இருக்குமாம்

நாளை மற்றும் நாளை மறுநாள் வறண்ட வானிலைதான் இருக்குமாம்

By: Nagaraj Mon, 10 Apr 2023 8:28:41 PM

நாளை மற்றும் நாளை மறுநாள் வறண்ட வானிலைதான் இருக்குமாம்

சென்னை: 11, 12-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக் கூடும் என தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாகதென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில்10-ம் தேதி இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து 11, 12-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக் கூடும் என தெரிவித்துள்ளது.

temperature,chennai,dry weather,notice ,வெப்பநிலை ,சென்னை, வறண்ட வானிலை, அறிவிப்பு

அதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோடை வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :