Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மார்ச் 2, 3,5ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும்

மார்ச் 2, 3,5ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும்

By: vaithegi Wed, 01 Mar 2023 4:33:38 PM

மார்ச் 2, 3,5ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “மார்ச் 2, 3,5ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும் எனவும் , சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மார்ச் 4ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது. அத்துடன் வெப்பநிலை அதிகபட்சம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

dry weather,tamil nadu,puducherry,karaikal ,வறண்ட வானிலை, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்

மீனவர்களுக்கான எச்சரிக்கையில், மார்ச் 4, 5ல் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும், அப்போது மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு மார்ச் 4, 5ல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :