Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் பதவியேற்றார்

கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் பதவியேற்றார்

By: Nagaraj Thu, 11 May 2023 8:18:36 PM

கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் பதவியேற்றார்

கொல்கத்தா: பதவியேற்றார்... கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் இன்று பதவியேற்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.சுப்பையா மற்றும் நளினி தம்பதியரின் மகனான டி.எஸ்.சிவஞானம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். சட்டப் படிப்பையும் முடித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய சிவஞானம், 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

பின்னர், 2011ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகப் பொறுப்பேற்று, 2021 இல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். நாட்டின் மிகப் பழமையான உயர்நீதிமன்றமான கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் இன்று (மே 11) பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஆனந்த போஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

calcutta,high court,judge, ,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, கொல்கத்தா, டி.எஸ்.சிவஞானம்

இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, சபாநாயகர் பீமன் பானர்ஜி, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள், டி.எஸ்.சிவஞானத்தின் குடும்பத்தினர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பதவிப் பிரமாணத்துக்குப் பிறகு பேசிய தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், மேற்கு வங்க மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் உறுதியுடன் பாடுபடுவேன். என தெரிவித்தார்.

Tags :
|