Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சையில் நடந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன்

தஞ்சையில் நடந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன்

By: Nagaraj Wed, 07 June 2023 7:20:31 PM

தஞ்சையில் நடந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒன்றாக மேடையில் ஏறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் ஓபிஎஸ் பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் காலத்திலிருந்து தொடர்ந்து செயல்படும் அதிமுக தொண்டர்களின் ஆழ்மனதில், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஆவலாக இருக்கிறது. இந்த இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி எல்லாமே தொண்டர்கள்தான்.

அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வலிமையுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எண்ணம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் போன்று மீண்டும் வராதா என்ற எண்ணம் மக்களிடமும் உள்ளது. நம்மை அரசியலில் யாரும் எதிர்க்க ஆளில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு இந்தத் திருமண விழா பிள்ளையார் சுழி போட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

transit,impact,marriage,ex-minister,ex-chief minister ,போக்குவரத்து, பாதிப்பு, திருமணம், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதல்வர்

டிடிவி தினகரன் பேசுகையில், சிலரின் பேராசையால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கனத்த இதயத்தோடு பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினோம். இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகள் ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சி.

இன்று திருமணம் மற்றும் இணைப்பு விழா மகிழ்ச்சி என இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. பழைய நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி. இதற்காக வைத்திலிங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமுமுக - அதிமுகவுடன் இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது. இந்த இணைப்பு துரோகிகளுக்கு பாடம் கற்பித்து, திமுகவை அகற்றி, எந்த மனமாற்றத்திற்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இந்த திருமண விழா நடைபெற்றது. விழாவிற்கு ஏராளமான அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் வந்ததால், தஞ்சை - திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags :
|