Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசத்தல் கேட்சுகள் பிடித்து ஆட்டத்தை மாற்றிய டு பிளசிஸ்

அசத்தல் கேட்சுகள் பிடித்து ஆட்டத்தை மாற்றிய டு பிளசிஸ்

By: Nagaraj Sat, 19 Sept 2020 9:55:39 PM

அசத்தல் கேட்சுகள் பிடித்து ஆட்டத்தை மாற்றிய டு பிளசிஸ்

ஆட்டை மாற்றி அசத்திய டு பிளசிஸ்... சென்னை அணி வெற்றி பெற 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி. இந்த போட்டியில் 3 அசத்தல் கேட்ச்சுகளை பிடித்து அசத்தினார் டுபிளசிஸ்.

சென்னை - மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் 2020 தொடரின் முதல் போட்டியில் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி.

மும்பை அணியின் ரோஹித் சர்மா, டி காக் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினாலும் அடுத்து வந்த வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

du plessis,3c,asathal,chennai team ,டு பிளசிஸ், 3 கேட்ச், அசத்தல், சென்னை அணி

ரோஹித் சர்மா 12 ரன்னிலும், டி காக் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை அணியில் சவுரப் திவாரி மட்டும் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் அடித்தார். இறுதியில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே அடித்தது.

சென்னை அணியில் லுங்கி கிடி 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், சாம் குர்ரான் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் 3 கேட்ச்களை பிடித்து அசத்தினார் டு பிளசிஸ். சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா மற்றும் ஜேம்ஸ் பட்டின்சன் ஆகியோரது கேட்ச்களை பிடித்தார்.

Tags :
|