Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானத்தில் இருந்து புகை கிளம்பியதால் பயணிகள் அச்சம்

தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானத்தில் இருந்து புகை கிளம்பியதால் பயணிகள் அச்சம்

By: Nagaraj Sun, 02 July 2023 9:44:26 PM

தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானத்தில் இருந்து புகை கிளம்பியதால் பயணிகள் அச்சம்

ரஷ்யா: தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அச்சத்தில் அலறிய சம்பவம் நடந்துள்ளது.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு நேரடி விமானங்கள் உள்ளன. அதன்படி, எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் பயணிகள் ஏறி தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

airplane,engine,noise,smoke, ,என்ஜின், பரபரப்பு, புகை, விமானம்

விமானம் புறப்பட தயாராக உள்ளது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியது.

இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து தொழில்நுட்ப குழுவினர் அங்கு வந்து சரி செய்தனர். பின்னர் 5 மணி நேரத்திற்கு பிறகு விமானம் இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
|
|
|