Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் மழையால் வரத்து குறைந்தது... எகிறியது தக்காளி விலை

தொடர் மழையால் வரத்து குறைந்தது... எகிறியது தக்காளி விலை

By: Nagaraj Wed, 07 Sept 2022 08:18:22 AM

தொடர் மழையால் வரத்து குறைந்தது... எகிறியது தக்காளி விலை

ஈரோடு: வரத்து குறைந்தது, விலை உயர்ந்தது... ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு காய்கறி சந்தைக்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகள் மற்றும் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால், காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. தொடா்ந்து சுபமுகூா்த்த நாள்கள், கோயில் விழாக்கள் காரணமாக காய்கறிகளின் தேவை மேலும் அதிகரித்துள்ளது.

ஈரோடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் விலையும் உயா்ந்துள்ளது. வரும் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், கேரள மாநிலத்துக்கு காய்கறிகள் அதிக அளவில் கொண்டுச் செல்லப்படுவதால் ஈரோடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து மேலும் குறைந்துள்ளது.

rainfall,erode,market,tomato,price rise ,தொடர்மழை, ஈரோடு, சந்தை, தக்காளி, விலை உயர்வு

இதனால், காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ. 40 வரை உயா்ந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் கிலோ ரூ. 60க்கு விற்பனையான கத்திரிக்காய் செவ்வாய்க்கிழமை ரூ.80க்கு விற்பனையானது. இதேபோல வெண்டைக்காய் விலையும் கிலோவுக்கு ரூ. 20 உயா்ந்து ஒரு கிலோ ரூ. 80க்கு விற்பனையானது.

கடந்த வாரம் கிலோ ரூ.40க்கு விற்பனையான முருங்கைக்காய் விலை ரூ.150க்கும், கிலோ ரூ.10க்கு விற்பனையான தக்காளி விலை கிலோ ரூ. 60க்கும் விற்பனையானது. பிற காய்கறிகளின் விலை விவரம் (கிலோவில்): புடலங்காய் ரூ. 50, பீா்க்கங்காய் ரூ.60, பாகற்காய் ரூ.50, முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.90, பீட்ரூட் ரூ.60, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.100, மிளகாய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.25, காலிபிளவா் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.50, கருப்பு அவரை, பட்டை அவரை ரூ.60, சின்னவெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ. 30.

Tags :
|
|
|