Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரட்டை ரயில்பாதை பணிகள் காரணமாக , பல்வேறு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

இரட்டை ரயில்பாதை பணிகள் காரணமாக , பல்வேறு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

By: vaithegi Thu, 09 Feb 2023 12:22:34 PM

இரட்டை  ரயில்பாதை பணிகள் காரணமாக , பல்வேறு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

சென்னை: மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில்பாதை இணைப்பு பணிகள் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதையொட்டி சில ரயில்கள் ரத்து செய்தும், பல்வேறு ரயில்கள் பகுதி தூரம் வரை ரத்து செய்தும் ரயில்வேதுறை அறிவித்துள்ளது. அத்துடன் பல ரயில்கள் மாற்றுபாதையில் இயக்கப்படும் எனவும், அந்த ரயில்கள் மதுரை செல்லாமல், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து இதுதொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், “வரும் 8, 11, 13, 15, 20, 22, 27 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் (22621), பிப்ரவரி 7, 10, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயில் (22622), பிப்ரவரி 23 முதல் 28 வரை மற்றும் மார்ச் 4 போன்ற நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - சென்னை செந்தூர் விரைவு ரயில் (16106), பிப்ரவரி 23 முதல் 27ம் தேதி வரை புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (16105) ஆகியவை மானாமதுரை வழியாக இயக்கப்பட உள்ளது.வரும் 24ம் தேதியன்று புறப்பட வேண்டிய ஓஹா - தூத்துக்குடி ரயில் (19568), 26ம் தேதியன்று புறப்பட வேண்டிய தூத்துக்குடி - ஓஹா ரயில் (19567), நாளை 8ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847), மார்ச் 5,6 ஆகிய தேதிகளில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848), பிப்ரவரி 8 முதல் மார்ச் 5 வரை புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை ரயில் (16128), மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய சென்னை - குருவாயூர் ரயில் (16127), பிப்ரவரி 9, 12, 16, 19, 23, 26 மார்ச் 2, 5 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை ரயில்(16352), பிப்ரவரி 9 16 23 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜம்மு ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - நெல்லை ரயில் (16788),


இதனை அடுத்து பிப்ரவரி 11, 18, 25 மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ஹௌரா ரயில் (12666) ஆகிய ரயில்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.பிப்ரவரி 7, 8, 10, 13, 14, 15, 17, 20, 21, 22, 24, 27, 28 மார்ச் 1, 3, 6 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை ரயில் (16340), பிப்ரவரி 28 மார்ச் 1 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய மும்பை - நாகர்கோவில் ரயில் (16339), பிப்ரவரி 11, 18, 25, மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கச்சுக்குடா ரயில் (16354), பிப்ரவரி 12, 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சுக்குடா - நாகர்கோவில் ரயில் (16353), பிப்ரவரி 23 முதல் மார்ச் 2ம் தேதி வரை புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் (12661), பிப்ரவரி 23 முதல் மார்ச் 3ம் தேதி வரை புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை பொதிகை ரயில் (12661),பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய நெல்லை - சென்னை விரைவு ரயில் (12631), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை -நெல்லை ரயில்(16232),

அதைத்தொடர்ந்து பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய சென்னை கொல்லம் ரயில் (16101), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயில் (16824), மார்ச் 1ம் தேதியன்று புறப்பட வேண்டிய நெல்லை- மும்பை தாதர் ரயில் (22630) போன்றவையும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். எனவே மதுரை செல்லும் பயணிகள் இந்த ரயில்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும்” என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|