பொருளாதார நெருக்கடியால் முடிவு... ராணுவ வீரர்கள் எண்ணிக்கை குறைப்பாம்
By: Nagaraj Sat, 14 Jan 2023 12:24:45 PM
இலங்கை: ராணுவ வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு... பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், செலவைக் குறைக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 35 ஆயிரமாகவும், 2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சமாகவும் குறைக்கப்படும் என பிரேமித பண்டார தென்னகோன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து தொழில்நுட்பத்திலும், திட்டங்கள் வகுப்பதிலும் வலிமையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பொருளாதார நெருக்கடியினால் இந்த முடிவு விரைவில் அமலாக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.