Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Tue, 13 June 2023 09:43:19 AM

வெப்ப சலனம் காரணமாக இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

சென்னை: மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை ஆடுது நாளை முதல் வருகிற 16-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலையாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.

tamilnadu,puducherry,karaikal,veppa chalanam ,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்,வெப்ப சலனம்

சில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :