Advertisement

கனமழையால் காய்கறிகள் அனைத்தும் அதிக விலைக்கு விற்பனை

By: vaithegi Wed, 27 Sept 2023 2:19:55 PM

கனமழையால் காய்கறிகள் அனைத்தும் அதிக விலைக்கு விற்பனை

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறியும் எந்தெந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதற்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதாவது, பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.35 க்கும், சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.70 க்கும், பச்சை மிளகாய் கிலோவுக்கு ரூ. 35 க்கும், உருளைக்கிழங்கு ரூ. 30 க்கும், பீட்ரூட் ரூ.15 க்கும், வாழைப்பூ ரூ.25 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

sales,vegetables ,விற்பனை,காய்கறிகள்


இதற்கு அடுத்ததாக, பாகற்காய் கிலோவுக்கு ரூ. 20 க்கும், சுரைக்காய் கிலோவுக்கு ரூ. 20க்கும், குடைமிளகாய் கிலோவுக்கு ரூ. 45 க்கும், அவரைக்காய் ரூ. 30 க்கும், பட்டர் பீன்ஸ் ரூ. 90 க்கும், முட்டைக்கோஸ் ரூ. 15 க்கும், கேரட் ரூ. 30 க்கும், கொத்தவரை ரூ. 25க்கும், கத்தரிக்காய் ரூ.30 க்கும், பெரிய கத்தரிக்காய் ரூ. 50 க்கும்,

மேலும் முருங்கைக்காய் ரூ. 25 க்கும், பீன்ஸ் ரூ. 60 க்கும், வெண்டைக்காய் ரூ. 15 க்கும், தக்காளி ரூ.15 க்கும், இஞ்சி ரூ. 260 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் காய்கறிகளின் விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|