Advertisement

மும்பையில் பெய்த கனமழை காரணமாக....போக்குவரத்து நெரிசல்

By: vaithegi Thu, 14 July 2022 10:02:22 PM

மும்பையில் பெய்த கனமழை காரணமாக....போக்குவரத்து நெரிசல்

மும்பை: மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை விடாமல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மின்சார ரெயில் போக்குவரத்தில் மழையின் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருந்தாலும் ரெயில்கள் சுமார் 15 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டது .

மேலும் மழையின் காரணமாக அந்தேரி மிலன் சுரங்கப்பாதையில் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. குர்லா கமானி சந்திப்பு, தேவ்னார் நீலம் ஜங்ஷன், மான்கூட்டு ரெயில்வே மேம்பாலம், பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பால கேட், ஒர்லி, விக்ரோலி, சாந்தாகுருஸ் பஸ் நிலையம், தாதர்டி.டி, வடலா, காட்கோபர், சோனாப்பூர் சந்திப்பு ஆகிய இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

traffic,congestion ,போக்குவரத்து,நெரிசல்

தொடர்ந்து மழை பெய்ததால் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பகுதிகளான போரிவிலி கோரேகாவ், ஜோகேஸ்வரி, அந்தேரி மற்றும் பாந்திரா ஆகிய இடங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறாங்கற்கள் சாலையில் விழுந்தது. இதில் வாகனங்கள் விபத்தில் எதுவும் சிக்காததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனே சாலையில் விழுந்த பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மழையளவு காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை கொலாபாவில் 2.4 செ.மீ., புறநகர் சாந்தாகுருஸ் பகுதிகளில் 4.5 செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது. நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags :