Advertisement

கனமழையால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு

By: vaithegi Sun, 01 Oct 2023 4:53:47 PM

கனமழையால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு

சென்னை:தமிழகத்தில் இடைவிடாது கனமழை பெய்து வரும் நிலையில் கொள்முதல் குறைந்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்வு .. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வரும் நிலையில் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் அதிகமாகியுள்ள நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் கடும் வீழ்ச்சடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுவுள்ளது.

price of vegetables,tomato,mung bean ,காய்கறிகளின் விலை ,தக்காளி, வெண்டைக்காய்

அந்த வகையில், தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 13-க்கும், சின்ன வெங்காயம் ரூ. 70க்கும், உருளைக்கிழங்கு ரூ. 30க்கும், கேரட் கிலோவுக்கு ரூ. 35க்கும், பீன்ஸ் கிலோவுக்கு ரூ. 90க்கும், தேங்காய் ரூ. 26க்கும், பீட்ரூட் கிலோ ரூ. 30க்கும், இஞ்சி கிலோவுக்கு ரூ. 250க்கும், மாங்காய் ரூ. 120க்கும்,

மேலும் வெண்டைக்காய் கிலோவுக்கு ரூ. 15 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இஞ்சியின் விலை மட்டுமே நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி பெரும் அடைந்து உள்ளனர்.

Tags :
|