Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று டிஸ்சார்ஜ் ஆனார்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று டிஸ்சார்ஜ் ஆனார்

By: Nagaraj Tue, 12 May 2020 6:35:05 PM

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று டிஸ்சார்ஜ் ஆனார்

மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ் ஆனார்... டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த, காங்., மூத்த தலைவர் மன்மோகன் சிங், திடீர் உடல் நலக் குறைவால், ஞாயிறு இரவு டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


manmohan singh,discharge,fever,new drug,surveillance ,மன்மோகன் சிங், டிஸ்சார்ஜ், காய்ச்சல், புதிய மருந்து, கண்காணிப்பு

புதிய மருந்து எடுத்து கொண்டதால் காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

நேற்று முழுவதும் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், மன்மோகனுக்கு கொரோனா பரிசோதனை பாதிப்பு இல்லையென உறுதியானது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Tags :
|