Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சரியாக தூர்வாரததால் விளைநிலங்களில் மழைநீர் புகும் அபாயம்… விவசாயிகள் குற்றச்சாட்டு

சரியாக தூர்வாரததால் விளைநிலங்களில் மழைநீர் புகும் அபாயம்… விவசாயிகள் குற்றச்சாட்டு

By: Nagaraj Sat, 12 Aug 2023 09:52:27 AM

சரியாக தூர்வாரததால் விளைநிலங்களில் மழைநீர் புகும் அபாயம்… விவசாயிகள் குற்றச்சாட்டு

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புடலாத்தி கிராமத்தில் காஞ்சனாறு ஓடுகிறது. இது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது மழைக்காலங்களை எதிர்கொள்வதற்காக ஆறுகளில் தூர்வாரும் பணியை தமிழக அரசால் முடக்கி விடப்பட்டுள்ளது.

காஞ்சனாற்றில் பகுதியில் தூர் வார சென்ற ஜேசிபி எந்திரம் தூர்வாரி கொண்டிருக்கும் பொழுது வண்டிக்கு தேவையான எரிபொருள் தீர்ந்து விட்டதாக அதை வாங்கிக் கொண்டு வருவதாக சென்ற ஓட்டுநர் மீண்டும் வரவில்லை.

farmers,farmland,hazards,rainwater,dredging ,விவசாயிகள், விளைநிலங்கள், அபாயநிலை, மழைநீர், தூர் வாருதல்

அன்று இரவு நேரத்தில் தூர்வார பயன்படுத்த ப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் தெரிகிறது. இதனால் ஆற்றை முழுமையாக தூர்வாராமல் பாதியில் விட்டுச் சென்றதுள்ளதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று கேட்ட பொழுது 9 லட்சம் நிதியில் அவ்வளவுதான் தூர் வர முடியும் என்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கூறியதாக தெரிகிறது.

இதனால் தங்களது விளைநிலங்களில் மழைநீர் செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர் எனவே ஆற்றை முழுமையாக தூர்வாரி கரை அமைத்து தர வேண்டுமென புடலாத்தி விவசாயிகள் கூறி வருகின்றனர்

Tags :