Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விளைச்சல் இல்லாததால் தக்காளி வரத்து 250 டன்னாக குறைவு .. அதிகரிக்கும் விலை

விளைச்சல் இல்லாததால் தக்காளி வரத்து 250 டன்னாக குறைவு .. அதிகரிக்கும் விலை

By: vaithegi Tue, 18 July 2023 2:25:05 PM

விளைச்சல் இல்லாததால் தக்காளி வரத்து 250 டன்னாக குறைவு .. அதிகரிக்கும் விலை

சென்னை: தக்காளியின் விலை கடுமையாக அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 140 க்கு விற்பனை ... தக்காளியின் விளைச்சல் குறைவால் நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு பெரும்பாலும் தக்காளி ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தே வருகிறது.

இத்தகைய நேரத்தில் இதன் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ. 140 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் நாள் ஒன்றுக்கு ரூ. 800 டன் தக்காளி வருகிறது.

tomato,koyambedu vegetable market ,தக்காளி ,கோயம்பேடு காய்கறி சந்தை

தற்போது விளைச்சல் இல்லாததால் வரத்து 250 டன்னாக குறைந்து உள்ளது. இத்தகைய காரணங்களால் விலை அதிகரித்து வருகிறது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்கப்படுகிறது.

தக்காளியை தொடர்ந்து இதர காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இத்தகைய சூழலில் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்ட பண்ணை பசுமை கடைகளில் கிலோ தக்காளி ரூ. 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags :
|