Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குற்றாலம் மெயின் அருவியில் இன்று நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் குளிக்க அனுமதி

குற்றாலம் மெயின் அருவியில் இன்று நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் குளிக்க அனுமதி

By: vaithegi Fri, 14 Oct 2022 7:40:09 PM

குற்றாலம் மெயின் அருவியில் இன்று நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் குளிக்க அனுமதி

தென்காசி: பொதுமக்கள் குளிக்க அனுமதி ... தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். தற்போது சீசன் முடிந்த பிறகும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைவாக வந்து கொண்டிருக்கிறது.

இதனை அடுத்து இந்நிலையில் நேற்று காலையில் தென்காசி மற்றும் குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான வெயில் அடித்தது. மாலை சுமார் 5 மணிக்கு தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

courtalam,common people,to bathe ,குற்றாலம் ,பொதுமக்கள் ,குளிக்க

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்தது. எனவே இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து உயர்ந்தது. இந்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் விழுந்தது.

இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நிலையில் மெயின் அருவியில் இன்று காலை நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags :