Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹரியானாவில் கடுமையான வெப்ப சூழ்நிலையால் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்வி நேரம் அறிவிப்பு

ஹரியானாவில் கடுமையான வெப்ப சூழ்நிலையால் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்வி நேரம் அறிவிப்பு

By: vaithegi Fri, 01 July 2022 12:22:48 PM

ஹரியானாவில் கடுமையான வெப்ப சூழ்நிலையால்  1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்வி நேரம் அறிவிப்பு

ஹரியானா : ஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் வெப்பமான வானிலைக்கு மத்தியில் இன்று (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பள்ளிகளின் நேரத்தை மாற்ற ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.

கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் இன்று (ஜூலை 1) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட நேரத்தை இன்று முதல் அமல்படுத்த ஹரியானா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

haryana,new education time ,ஹரியானா,புதிய கல்வி நேரம்

அதன்படி கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு பள்ளிகள் அனைத்தும் இனி காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை நடத்தப்படும் என்று ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DoE) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை அனைத்துப் பள்ளிகளும் தவறாமல் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், ‘கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை 1, 2022 முதல் ஹரியானாவில் பள்ளி நேரம் காலை 8:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் கோடை விடுமுறைக்கு முன் மே 4ம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை என அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டது.ஆனால் தற்போது துவங்கி இருக்கும் கல்வியாண்டிலும் வெப்ப சூழல் தொடர்வதால் இதனை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரைக்கும் மாற்றியமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Tags :