Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடு..பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடு..பள்ளிக்கல்வித்துறை

By: vaithegi Fri, 01 July 2022 10:06:31 AM

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால்  பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடு..பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த சில தினங்களாகவே கொரோன தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்த குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

new regulation,school education ,புதிய கட்டுப்பாடு,பள்ளிக்கல்வித்துறை

இது தொடர்பாக மாவட்ட முதன்னை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளி வளாகத்தினுள் கொரோனா விதிமுறைகளை 100 விழுக்காடு கடைபிடிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மாணவர்கள் அடிக்கடி சோப்பு, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும் என கூறியுள்ளார்.

இதைதொர்ந்து, அதிகமான மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட வேண்டும் எனவும், உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் எனவும் , தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் , வகுப்பறைக்குள் நல்ல காற்றோட்டமான சூழல் நிலவ வேண்டும் என்றும் பல கட்டுபாடுகளை விதித்து அவற்றை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :